தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னாட்களில் தனது படங்களிலேயே தலை காட்டி நடிக்கவும் தொடங்கியவர் கே. எஸ். ரவிக்குமார். கமர்சியல் படங்களை எடுப்பதில் கே. எஸ். ரவிக்குமார் அடிச்சிக்க ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு சிறப்பாக கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி கண்டு உள்ளார்.
கமர்ஷியல் படத்தில் கவர்ச்சி, ஐட்டம் டான்ஸ் போன்றவை இடம் பெற்றதால் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார். இதனால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிக நாட்கள் ஓடிய தோடு வசூல் வேட்டையும் நடத்துகின்றன இதனால் டாப் நடிகர்கள் பலரும் கேஎஸ் ரவிக்குமார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
சினிமாவில் பல நடிகர், நடிகைகளை உயர்த்தி உள்ளதோடு அவர்களின் சினிமா பயணத்தை மாற்றியுள்ளார் கே எஸ் ரவிகுமார் அந்த வகையில் ராணி என்ற நடிகை ஆரம்பத்தில் ஹீரோயினாக கால்தடம் பதித்து இருந்தார்.
கங்கை அமரன் இயக்கத்தில் உருவான வில்லுபாட்டுக்காரன் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார் அதை தொடர்ந்து இவர் நாயகியாக சிறப்பாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை படத்தில் டீச்சர் ரோலில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தார் அதை ஏற்று வந்தார்.
கதையை சொல்ல அவருக்கு பிடித்து போக அந்த படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்து அசத்தினர். அது அவருக்குப் பெரும், புகழையும் பெற்றுத் தந்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் அள்ளிக்கொடுத்தன. தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவர்ச்சி ரோல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார் ஒரு கட்டத்தில் சினிமாவும், மக்களும் இவரை கவர்ச்சி நடிகையாகவே பார்த்தனர்.
எது எப்படியோ அவரது சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்தார். இப்படி பயணித்துக்கொண்டிருந்த ராணி திடீரென ஒரு கட்டத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு ஒரு பெண் இருக்கிறார் அவர் காலேஜ் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.