மலையாள நடிகரை கொக்கி போட்டு தூக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி.! அடுத்த பட ஹீரோ இவரா.?

திரைஉலகில் ஆர்வம் இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் களம் இறங்குகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதியும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. சினிமா மீது உள்ள ஆசையின் காரணமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார் இவர் இயக்கத்தில் தற்போது இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன.

இந்த இரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார். இவர் இதற்கு முன்பு வணக்கம் சென்னை மற்றும் விஜய் ஆண்டனி  நடிப்பில் வெளியான காளி என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக எந்த பிரபலத்தை வைத்து எடுக்கப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் பேசுபொருளாக சமீப காலமாக இருந்து வந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த அஸ்வின் தான் தற்போது அதிகப்படியான ரசிகர்கள் உருவாகிக் கொண்டே இருப்பதால் இவரை வைத்து தான் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா 3 வது படத்தை எடுக்க உள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது முற்றிலும் வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையாம். மாறாக மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் ஜெயராமன் அவர்களின் மகன் காளிதாஸ் தான் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கூட ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயராமன் மற்றும் மகன் காளிதாஸ் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் காரணமாகத்தான் இவர்கள் நேரில் வந்து சந்தித்தனர் என்று கூறுகின்றனர்.

Leave a Comment