துருவ் விக்ரம் நடிக்கும் மகான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.! இது என்ன இவ்வளவு பயங்கரமா இருக்கு என கேட்கும் ரசிகர்கள்.!

dhruv vikram

சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நானும் ஒரு நடிகன் தான் என நிரூபித்தவர் தான் நடிகர் விக்ரம் இவர் தனது சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்துவிட்டு வந்தார் இவருக்கு ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகர் என பெயர் வந்துவிட்டது பின்பு சேது என்ற திரைப்படத்தின் மூலம் நானும் ஒரு நடிகன் தான் என நிரூபித்து விட்டார்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் இவரைப் போலவே இவரது மகனான துருவ் விக்ரம் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் மகான் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவதால் இந்த திரைப்படத்தை பல ரசிகர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

விக்ரம் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் ரீல் முதல் பார்வை வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வெளியானது.இந்த அப்டேட் தொடர்ந்து தற்பொழுது துருவ் விக்ரம் கதாபாத்திரத்திற்கான ரீல் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் துரு விக்ரம் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக தியானம் செய்வது போல் இருக்கிறது இந்த திரைப்படத்தின் கதை ஒரு வித்தியாசமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த போஸ்டரை தற்பொழுது இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.