தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.!

தமிழ்சினிமாவில் இளம் இயக்குனர்களின் முக்கியமாகக் கருதப்படுபவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் ஒருசில படங்களை இயக்கினாலும் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின. இவர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருபெற்றார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவர் 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளிவரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

danush
danush

இந்த வகையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் நேற்று ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ஒரு மாசான அப்டேட்டை அறிவித்திருந்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு வைரஸ் காரணமாக சுதந்திரம் அப்டேட்டை தரமுடியவில்லை இந்த பிரச்சனையை முடியட்டும் பிறகு கண்டிப்பாக அப்டேட் வருமென கூறியிருந்தார் மேலும் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்றும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment