ரமணா படத்தின் கதை என்னுடையதுன்னு தெரிந்தும்.. விஜயகாந்த் செய்த செயலால் பிரமிந்து போனேன் பிரபல இயக்குனர் பேட்டி.!

90 காலகட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடியவர் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமா உலகில் படங்களில் நடிப்பதையும் தாண்டி இல்லாதவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் காசை வாரி இறைத்தார் மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் என்ன உணவு சாப்பிடுகிறானோ  அதை தான் எல்லாரும் சாப்பிட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் அதை நடைமுறையும் படுத்தினார்.

இதனால் சினிமா உலகில் கேப்டன் விஜயகாந்த் எப்பொழுதுமே மறக்க முடியாது என பலரும் கூறி வருகின்றனர். அதே போல தான் பல இயக்குனர்களையும் வளர்த்து விட்டுள்ளார் அந்த வகையில் ரமணா படத்தின் கதை தன்னுடையது என கூறி அப்பொழுது பரபரப்பை கிளப்பியவர் நந்தகுமார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ரமணா. இந்த படம் இப்பொழுதும் கூட பலருக்கும் பிடித்த திரைப்படமாக இருக்கிறது. ரமணா படம் தன்னுடைய ஆசான் படத்தின் கதை தான் என இயக்குனர் நந்தகுமார் ஊடகங்களுக்கு  பேட்டி கொடுத்து அதிரவிட்டார் இது தொடர்பாக அப்பொழுது நடிகர் சங்கத்திற்கு சென்றார்.

அப்பொழுது தலைவராக விஜயகாந்த் இருந்தார் ஆனால் எல்லா பிரச்சனையும் தீர்ப்பவராக நெப்போலியன் தான் இருந்தார் நெப்போலியுடன் பிரச்சனையை சொன்னேன் அவர் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தார் மேலும் இழப்பீடாக பணம் பெற்று தருவதாகவும் கூறினார் ஆனால் நான் படத்தின் கதை என்னுடையது என இடம்பெற வேண்டும் என தெரிவித்தேன்.

முருகதாஸ் கேட்டிருந்தாலே நான் அந்த கதையை கொடுத்திருப்பேன் என நெப்போலியன்னிடம் சொல்லிவிட்டு வந்தேன் பிறகு விஜயகாந்த் எனக்கு போன் செய்து வேறு ஏதாவது கதை இருக்கிறதா என கேட்டாரு உடனே நான் இரவு 9 மணி அளவில் விஜயகாந்த் அவரை சந்தித்தேன்.

அவரின் ஒட்டுமொத்த குழுவினரும் அமர்ந்து கதை கேட்க சுமார் 3 மணி நேரம் தென்னவன் படத்தை கதையை சொன்னேன் கதை முழுவதையும் கேட்டுவிட்டு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி அனுப்பினார் அடுத்த நாள் காலையில் நந்தகுமாருக்கு போன் வந்ததாம் நீங்கள் அட்வான்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் தென்னவன் படம் அப்படித்தான் உருவானது என கூறினார்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment