அஜித்குமார் பற்றி பேசிய இயக்குனர் ஹச். வினோத் – நாம் நினைப்பதை விட மிக வித்தியாசமானவர் AK.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அஜித் நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வலிமை படம் ரிலீசாக இருக்கிறது.

ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள படக்குழு தற்போது அடுத்தடுத்த 30 செகண்ட் இருக்கும் ப்ரோமோவை வெளியிட்டு அசத்தி வருகிறது இப்பொழுதுகூட அஜித் செம்ம மாஸாக வசனம் பேசி இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வலிமை படத்திலிருந்து ஆக்ஷன் மற்றும் மாஸான காட்சிகள் நிறைந்த சில ப்ரோமோகளை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிசினஸ் வேட்டைகளும் ஜோராக நடக்கிறது. மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு தற்பொழுது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறது அந்த வகையில் கார்த்திகேயா இந்த படம் குறித்தும் பேசி வருகிறார் மறுபக்கம் இயக்குனர் வினோத்தும் பேட்டிகள் கொடுத்து வருகிறார் அது குறித்து பேசியுள்ளார். அஜித்துடன் நான் கதை சொல்லும் பொழுதும் சரி, சூட்டிங் காட்டிலும் சரி அவரைப் பார்த்து வியந்த விஷயங்கள் பல..

மேலும் அவரை நாம் அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது ஒரு சினிமா பிரபலமாக இருந்தாலும் அவரிடம் பல்வேறு விதமான விஷயங்கள் இருக்கிறது நாம் எதிர்பார்ப்பதைவிட பல விஷயங்கள் அவரிடம் இருந்து உள்ளது அவருடன் பணி புரிய சிறப்பாக இருப்பதாக கூறினார் மேலும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறேன் அவருடன் ஏற்கனவே பல்வேறு கதைகளை சொல்லி உள்ளேன் அதில் ஒரு கதையை சற்று மாறுதல் செய்து அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இருக்கும் என பேசி உள்ளார்.

Leave a Comment