தல 61 : அஜித் எடுத்த முடிவுவால் மண்டையை பிச்சிக்கும் இயக்குனர் ஹச். வினோத்.! வெளியான சூப்பர் தகவல்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் சமீபகாலமாக சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. எச் வினோத் என்ற சிறந்த இயக்குனரை தேர்வு செய்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரையிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படத்தின் சூட்டிங் ஆரம்பித்தபோது அப்டேட்டை கொடுக்கவில்லை என்றாலும் முடித்தபிறகு வலிமை படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்கிறார்களோ இல்லையோ படக்குழு அள்ளி வீசி வருகிறது இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உச்சியிலேயே இருக்கின்றனர்.

வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கிறது. அதற்கு முன்பாக தல ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்க நிலையில் தல அஜித் அடுத்த படத்தையும் ஹச். வினோத் இயக்க உள்ளதால் தல 61 படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தையும் மிக பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த நிலையில் தல 61 வது படம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இயக்குனர் வினோத் ஆரம்பத்தில் அஜித்திற்கு ஒரு ஒன்லைன் ஸ்டோரியை சொல்லி உள்ளார்.

அப்போது அஜித் ஓகே சொன்னார் ஆனால் தற்போது அஜித் முழு கதையும் கேட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் கூறிய முழு கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் வேறு ஒரு கதையை எழுதி வருகிறாராம் வினோத்.

Leave a Comment

Exit mobile version