என்னுடைய அடுத்த படம் இப்படி தான் இருக்கும்..! இயக்குனர் கௌதம் மேனன் ஓபன் பேட்டி..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் கௌதம் மேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படம் கலவையாக இருந்த நிலையில் இந்த திரைப்படம் என்ன ஆகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் இதனை தொடர்ந்து கௌதம் மேனன் அவர்கள் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமைபோல் காக்க போன்ற திரைப்படத்தை முடித்த பிறகு அவர் இயக்கம் திரைப்படம் என்ன என்பது குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் ஆக்சன் அல்லது ரொமான்ஸ் திரைப்படமா என அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்து அவர் கூறியுள்ளார் அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா வாரணம் ஆயிரம் போன்று முழுக்க முழுக்க ரொமான்ஸ் திரைப்படமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நண்பர்களுடன் பொழுதுபோக்கு அல்லது உடற்பயிற்சி என்ற கேள்விக்கு அவர் பொழுது போக்கு என பதில் கூறிய நிலையில் பயணம் செய்வதில் ரயிலில் மார்க்கமா சாலை மார்க்கமா என்ற கேள்விக்கு அவர் ரயிலை தேர்வு செய்துள்ளார்.  அதேபோல சாக்லேட் ஐஸ்கிரீம் எது பிடிக்கும் என்ற கேள்விக்கு சாக்லேட் என கௌதம் என்ன என்பதை கூறியுள்ளார்.

அதேபோல நடிப்பு மற்றும் பாடல் பாடுவது போன்றவற்றில் எதில் இஷ்டம் என்று கேட்ட நிலையில் அவர் நடிப்பை தேர்வு செய்துள்ளார் அதேபோல கௌதம் மேனேன்க்கு கல்லூரி  காலம் மிகவும் பிடித்ததாகவும் தனக்கு தனியாக பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளராக வலம் வரும்  ஏ ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா ஆகியவர்களில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏ ஆர் ரகுமான் என கௌதம் மேனன் அவர்கள் பதில் கூறியுள்ளார் அதேபோல தனக்கு பிடித்த இயக்குனர் மணிரத்தினம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த நடிகர் பற்றிய கேள்விக்கு கமலஹாசன் என்றும் பதில் கூறியுள்ளார் மட்டுமில்லாமல் தான் திரைப்பட இயக்குனராக இல்லாமல் இருந்தால் தற்போது கிரிக்கெட் வீரராக மாறி இருப்பேன் என்றும் அவர் கூறிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.

Leave a Comment

Exit mobile version