அடச்ச ஒரு இயக்குனர் செய்ற வேலையா இது.! மகிமா நம்பியார் தூங்கும் பொழுது சிஎஸ் அமுதன் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா..

Mahima Nambiar: படப்பிடிப்பு முடித்துவிட்டு அசதியில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் பார்த்த வேலையால் செம கடுப்பாகி உள்ளார். நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்த வந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தமிழில் சாட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதில் சமுத்திரக்கனியின் மாணவியாக நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவருடைய கேரக்டர் நல்ல ரீச்சை பெற்றது. இவருடைய நடிப்பும் இந்த படத்தில் பாராட்டப்பட்டது இவ்வாறு சட்டை படத்தின் வெற்றியினை தொடர்ந்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட தொடர்ந்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் ஆர்யாவுடன் இணைந்து மகாமுனி என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்திருக்கும் மஹிமா நம்பியார் தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் முன்னாள் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பயோபிக் படமாக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த படத்திற்கு 800 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மதிமலர் ஜீயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

mahima nambiar
mahima nambiar

இதனை அடுத்து மஹிமா நம்பியார் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அப்படி படம் பிடிப்பு முடிந்தவுடன் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது பயணத்தின் மஹிமா நம்பியார் வாயைப் பிளந்து தூங்கி உள்ளார்.

இதனைப் பார்த்து இயக்குனர் சி.எஸ் அமுதன் அதனை அப்படியே வீடியோவாக எடுத்து பட குழுவினர்களுக்கு ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த மஹிமா நம்பியார் இது மிகப்பெரிய அசிங்கம் என்று செல்லமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்