மற்ற மொழித் திரைப்படங்களை இந்தக் காரணத்தால் தான் இயக்கவில்லை உண்மையை கூறிய பாக்கியராஜ்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என்று இரு துறைகளிலும் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி சினிமாவின் ஒரு அங்கமாக திகழ்பவர் நடிகர் பாக்கியராஜ்.

இவர் சுவரில்லா சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிறகு தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.பிறகு இவர் எடுத்த முதல் படமே இவருக்கு இயக்குனராக மிகப்பெரிய வெற்றியை தந்ததால் தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்தார்.அதே அளவுக்கு நடிகராகவும் பல படங்களில் நடித்திருந்தார்.

இவர் இயக்குனர் மற்றும் நடிகர் இந்த இரண்டையும் தாண்டி திரைக்கதை எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருந்ததால் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேல் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை நாயகனாக இருந்தாலும் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற பிற மொழியில் இயக்குனராக தனது கால் தடத்தை பதிக்கவில்லை.

ஏன் அவர் வேறு மொழிகளில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது நான் தமிழில் எடுக்கும் படத்தை தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு எனக்கு கிட்டத்தட்ட ஆறு மாதம் காலம் தேவைப்படும். எனவே அரைச்ச மாவை அரைப்பதற்கு ஆறு மாதம் செலவிடுவதற்கு புதிதாக திரைக்கதை ஒன்றை உருவாக்கலாம் என்ற ஆர்வம் எனக்கு மிகவும் அதிகமாக இருந்தது.

Bhagyaraj_EPS
Bhagyaraj_EPS

இவ்வாறு நான் பிற மொழியில் எடுத்து இருந்தால் பணம் சம்பாதித்து சீக்கிரத்தில் செட்டிலாகி இருக்கலாம். ஆனால் எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பெரிதாக ஆர்வம் இல்லை. அதிக புதிய படங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது என்பதால் நான் அதன் மீது கவனம் செலுத்தி பணம் சம்பாதிப்பதில் தவற விட்டேன்.

இவ்வாறு நான்  கனடம்,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் என் கவனத்தை செலுத்தி இருந்தால் தமிழில் என்னால் இத்தனை படங்கள் இயக்கி இருக்க முடியாது என்றும் நான் இதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment