17 வருடங்கள் கழித்து தனது மனைவியை விவாகரத்து செய்த “இயக்குனர் பாலா” – அதிர்ச்சியில் தமிழ் சினிமா.

bala
bala

தமிழ் சினிமா உலகில் மற்ற இயக்குனர்களை விட தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு சிறப்பாக பயணித்தவர் இயக்குனர் பாலா. இவர் பெரும்பாலும் நடிகர்களுக்கு கதையை சொல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கதையை சொல்லி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பார்.

மேலும் இவர் எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமல் தனித் தன்மையுடன் இருப்பதால் இவரது திரைப்படங்கள் வெற்றியை ருசிக்கும் அந்த வகையில் இதுவரை அவன் இவன், சேது, நந்தா, நான் கடவுள், பிதாமகன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் இப்படி தமிழ் சினிமாவில் சிறந்த படங்களையும் கொடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது படத்தை பாருங்க இன்னும் ரசிகர்கள் கூட்டம் கியூவில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இயக்குனர் பாலா இதுவரை சூர்யா, விக்ரம் ஆர்யா, விஷால், அதர்வா, சசிகுமார், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் போன்ற நடிகர்களை வைத்து சிறந்த நடிப்பை வெளி வாங்கி அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்கியிருப்பார்.

வெகுவிரைவிலேயே கூட மீண்டும் சூர்யாவுடன் கை கோர்க்க ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவருகின்றன இது போதாத குறைக்கு இயக்குனர் பாலா தயாரிப்பில் இறங்கி வெற்றி படங்களை தயாரித்து வருகிறார் இது ஒரு பக்கமிருக்க இவர் நிஜ வாழ்க்கையிலும் சிறப்பாக பயணித்துள்ளார்.

அந்த வகையில் பாலா 2004-ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. 17 வருடங்களாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மனதளவில் பிரிந்து வாழ்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இன்று பாலா – முத்து மலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்றுபிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி தற்போது சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.