இனிதான் தாரை தப்பட்டை கிழிய போகுது.! அதிரடியாக களம் இறங்கும் பாலா.! காதை மூடிக்கொள்ளும் படி வசனம்…

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டும்தான் படத்தை பார்க்க வருகிறார்கள் ரசிகர்கள் என பெரும் குற்றச்சாட்டில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது நல்ல கதை உள்ள திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்குகிறார்களோ அவர்களின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படித்தான் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில் இயக்குனர் பாலா அவர்களும் ஒருவர் இவரின் படத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.  பாலா திரைப்படம் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது அந்த அளவுக்கு பாலா மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இப்படி இருந்த பாலாவிற்கு சமீபகாலமாக பாலாவின் திறமையை காட்டுவதற்கு எந்த ஒரு திரைப்படம் வெளிவர வில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் இயக்கத்தில் கடைசியாக தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப் படங்கள் வசூல் ரீதியாக சிறிது சரிவை சந்தித்தாலும்.

விமர்சன ரீதியாக விமர்சனங்களைப் பெற்றது இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த திரைப்படத்தை இயக்கினார் பாலா ஆனால் அந்த திரைப்படம் சரியாக வரவில்லை என பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைக்கு பிறகு எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்தாக வேண்டும் என உச்சகட்ட உறுதியாக இருக்கிறார் பாலா.

Arjun-Reddy-Remake-Director-Bala

இந்த நிலையில் பிதாமகன் சேது திரைப்படத்தை போல ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம் பாலா இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் பாலாவிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சும்மாவே பாலா திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் ராவாக வசனம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அப்படி இருக்கும் வகையில் ott படம் என்றால் சொல்லவே வேண்டாம் பாலா ராஜ்ஜியம்தான் படத்தில் வசனங்கள் காதைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை இயக்கிய பல இயக்குநர்கள் பெரிய ஆளாக மாறிவிட்டார்கள்.  இந்த நிலையில் பாலா அவர்களை விட நான் தான் கெத்து என நிரூபிப்பதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version