பாலாவின் வெகு நாள் விரதத்திற்கு படையல் போல கிடைத்த முன்னணி நடிகரின் பட வாய்ப்பு..! சும்மா விடுவாரா தலைவரு..!

0

director bala latest movie update: தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் பாலா. பொதுவாக பாலாவின் திரைப்படம்  என்றாலே தியேட்டரில் கூட்டம் அலை மோதுவது வழக்கம் தான். அந்த வகையில் இவருடைய பெயர் கெடும் அளவிற்கு சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அமைந்து வருகிறது.

ஆனால் இயக்குனர் பாலா தான் பல்வேறு நடிகர்களை  பிரபலமாக்கியது என்று கூட சொல்லலாம். எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில்  சொதப்பலான திரைப்படத்தில் நடித்து வந்த விக்ரம் தற்போது முன்னணி நடிகராக உருவானதற்கு பாலாவின் சேது திரைப்படம் தான் காரணம்.

அந்த வகையில் இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், போன்ற வித்தியாசமான பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இத்திரைப்படம் நல்ல வெற்றியையும் வசூலையும் கொடுத்தாலும் அதன் பிறகு இவர் இயக்கத்தில் உருவான அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றும் வசூலில்  தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து சசிகுமாரை வைத்து தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இத் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது. இதனால் எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற காரணத்தினால் மீண்டும் தன்னுடைய பழைய நடிகருடன்  உடனே ஜோடி போட முடிவு எடுத்துள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே சூர்யாவை வைத்து பிதாமகன் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்ட பாலா தற்போது சூர்யாவை வைத்து மற்றொரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தின் கதையை கூட சூர்யாவிடம் கூறியிருந்தாராம் இதைக் கேட்ட சூர்யா மிரண்டு போய் விட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பானது சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

surya-1
surya-1