இயக்குனர் பாலா இப்படியாப்பட்ட ஆளா.? உண்மையை உடைத்த பிரபலம்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இயக்குனர் பாலா ஒரு மோசமான இயக்குனர் என்று தற்போது பிரபலம் ஒருவர் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது இயக்குனர் பாலா ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா மீது வந்த ஆர்வத்தின் காரணமாக சென்னை வந்துள்ளார்.

சென்னையில் வந்த புதிதில் எங்கு போவது என்று தெரியாமல் இருந்து வந்த பாலா பிரபலம் ஒருவரிடம் தஞ்சம் அடைகிறார் அவர் மூலம் சினிமாவில் பிரபலமான ஒரு இயக்குனரிடம் துணை இயக்குனராக இருந்து வருகிறார். இப்படியே சில ஆண்டுகள் போக ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்தார் பாலா. அப்போது எழுதப்பட்டது தான் சேது படத்தின் கதை.

இந்த கதையை வைத்துக் கொண்டு அனைத்து நடிகர்களிடமும் போய் கேட்டுள்ளார் ஆனால் கதைப்பிடித்தும் சில மாறுபாடுகள் செய்ததால் அவர்கள் நடிக்கும் முன் வரவில்லை . அதன் பிறகு எத்தனையோ நடிகர்களிடம் கேட்டுள்ளார் யாருமே முன்வரவில்லை பின்னர்  தயாரிப்பாளரை தேட ஆரம்பித்தார் அப்போது இந்த கதை பிடித்து போய் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

இந்த நம்பிக்கையோடு மறைந்த முரளி அவர்களை சந்தித்து இருக்கிறார் பாலா இந்த கதை முரளி அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த நேரத்தில் பாலா எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்தது அதாவது இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிறுவனம் தயாரிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் மனஉலச்சளுக்கு ஆளானார் பாலா. பின்னர் இந்த கதையை வைத்துகொண்டு மதுரையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். அதன் பினர் அந்த கதை பிடித்துபோய் மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க முன் வந்தார்.

பின்னர் மறுபடியும் முரளி அவர்களிடம் போய் கேட்கும் போது அவர் படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்ததால் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதே சமயத்தில் சினிமாவில் ராசி இல்லாத ஒரு நடிகராக இருந்தவர் தான் நடிகர் விக்ரம். அந்த சமயத்தில் நடிகர் விக்ரம் எந்த படம் கிடைத்தாலும் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்து இருக்கிறார் அந்த சமயத்தில் தான் இயக்குனர் பாலா சேது கதையை எடுத்துக்கொண்டு அவரிடம் கூறியிருக்கிறார்.

பின்னர் இந்த கதை பிடித்து போய் அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படம் வெளியானபோது தியேட்டரில் அமைதியாக ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த இயக்குனர் பாலா முதல் பாதி முடிந்தவுடன் ரசிகர்கள் எல்லாம் எழுந்திரித்து வெளியே போக ஆரம்பித்தார்கள் அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு இரண்டாம் பாதியை பார்த்துவிட்டு செல்லுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அந்த இரண்டாவது பாதியை பார்த்ததுக்கு பிறகு ரசிகர்கள் யார் பா இந்த இயக்குனர் என்று அவரை கையைப் பிடித்து படம் மிக அருமையாக இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்கள். இந்த காலகட்டத்தில் எந்த படம் வெளியானாலும் உடனே அந்த படத்தின் விமர்சனத்தை அனைவரும் பார்த்து விடுகிறார்கள் ஆனால் 90களில் அப்படி கிடையாது ஒரு பத்திரிகை தாளில் மூலம் தான் விமர்சனத்தை பார்ப்பார்கள் அப்படி அந்த விமர்சனம் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்.

இதனால் சேது படம் வெளியான போது இரண்டு நாட்கள் கூட்டம் குறைவாக இருந்தது அந்த விமர்சனம் வெளியாகிய பிறகு திரையரங்குகளில் கூட்டம் குவிய ஆரம்பித்தது கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது சேது படம். அதன் பிறகு இயக்குனர் பாலா சிவகுமாரிடம் சென்று உங்கள் மகன் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சேது படத்தின் மூலம் தன்னை நிரூபித்த பாலா அடுத்ததாக சூர்யாவை வைத்து நந்தா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அதுவரைக்கும் நேருக்கு நேர் படத்தில் மூலம் பிரபலமான சூர்யா அதன் பிறகு எந்த ஒரு திரைப்படமும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை அது மட்டும் இல்லாமல் சூர்யாவுக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் இயக்குனர் பாலா சூர்யாவிடம் சென்று நந்தா படத்தின் கதையை கூறி இருக்கிறார் இந்த படத்தில் நடிக்க முழுமையாக ஒப்புக்கொண்ட சூர்யா இந்த படத்தில் தன்னை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிக் கொண்டார். அதன் பிறகு நந்தா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது.

இதனாலேயே இயக்குனர் பாலா மிகவும் பிரபலமானார் மீண்டும் சூர்யா, விக்ரமை வைத்து பிதாமகன் திரைப்படத்தை இயக்கினார் பிதாமகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அவன் தொடர்ச்சியாக அவன் இவன் படத்தையும் இயக்கினார் பாலா இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்று பாலாவிற்கு சினிமாவில் ஒரு அங்கீகாரமும் கிடைத்தது.

இப்படி அடுத்தடுத்த படங்களை வெற்றி படமாக கொடுத்த பாலா வருமா திரைப்படத்தின் சருக்களின் காரணமாக பல விமர்சனங்களை பெற்றார் அது மட்டுமல்லாமல் வருமா படத்திற்கு பிறகுதான் இவருடைய உண்மையான முகமும் தெரிய ஆரம்பித்தது. அதாவது சியான் விக்ரம் அவர்கள் பாலா தனக்கு ஒரு அங்கீகாரத்தை பிடித்து கொடுத்தது போல் தன்னுடைய மகனுக்கும் ஒரு அங்கீகாரத்தை பிடித்து கொடுப்பார் என்று எண்ணி தெலுங்கு சினிமாவில் வெளியான ஆதித்ய வர்மா படத்தின் ரீமேக்கை பாலாவிடம் ஒப்படைத்தார்.

அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் தன்னுடைய மகன் துருவிக்ரமையும் நடிக்க வைத்தார் சியான் விக்ரம் பாலா மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக தன்னுடைய மகனையும் அவருடைய திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்த படமும் முழுமையாக முடிந்து வெளிவர காத்திருந்தது. அதன் பின்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர், விக்ரம், துருவிக்ரம், ஆகிய மூவரும் இந்த படத்தை தனியாக பார்த்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் இந்த படத்தின் பாதியிலேயே துருவிக்ரம் எழுந்திருத்து வெளியே சென்று விட்டாராம் அது மட்டுமல்லாமல் இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளரும் விக்ரமும் மெய்சிலிரத்து போய் விட்டார்களாம். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க வெறும் ஆபாசமாக காட்டியுள்ளாராம் இயக்குனர் பாலா.

அது மட்டுமல்லாமல் இந்த படம் வெளியே வந்தால் உங்களுடைய மகன் பெயர் கெட்டுவிடும் என்று சொல்லி இருக்கிறாராம் இந்த படத்தின் தயாரிப்பாளர் பின்னர் இந்த படத்தை வெளியிடாமல் அப்படியே ட்ராப் செய்துவிட்டாராம் வர்மா படத்தின் தயாரிப்பாளர். இதைக் கேட்ட பாலா ஓ அவ்ளோதானா என்று கூறி தன்னுடைய உண்மையான முகத்தை வெளிக்காட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய  சுய ரூபத்தையும் விக்ரமிடம் காட்டியுள்ளார் இயக்குனர் பாலா இதைதான் சினிமா பிரபலம் ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக புழிந்தவர்தான் பாலா.

Leave a Comment