17 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகருடன் கைகோர்க்கும் பாலா.!! இந்த முறை வேற லெவல் தான்…

0

director bala after 17 years joining with leading actor again: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படம் ரியாலிட்டியாக காணப்படும்.

அதுமட்டுமில்லாமல் பாலா தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டு அதன் வழியில் தான் படத்தை இயக்கி வருகிறார், அதனால் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் தயங்குவார்கள், இந்த நிலையில் கடைசியாக பாலா விக்ரமின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவரின் மகன் துரு விக்ரமை வைத்து வர்மா திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அந்த திரைப்படம் சரியாக வரவில்லை என கிடப்பில் போட்டார்கள். அந்த திரைப்படத்தை நான்கு என்டர்டைன்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது, வர்மா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பாலாவிற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டு விட்டதாக கூறினார்கள் பலரும்.

அதுமட்டுமில்லாமல் பாலாவிற்கு படம் அவ்வளவுதான் இனி எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என பல பேச்சுக்கள் அடிபட்டது, அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் பாலா பிதாமகன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார் அதன் பிறகு 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி வைக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.