விஜய் தேவர்கொண்டா, துல்கர் சல்மான், சிம்பு மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் ரீமேக்காகும் அவள் அப்படித்தான்.!! இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவிப்பு.

0
str-tamil360newz
str-tamil360newz

Director Badri Venkatesh announces. Vijay Devarkonda, Dulquer Salmaan, Simbu and Suruti Haasan acting in aval apadithaan movie remake. 1978ஆம் ஆண்டு முன்னணி நடிகர்களான  கமலஹாசன்,  ரஜினிகாந்த்,  ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம் அவள் அப்படிதான். மேலும் இந்த திரைப்படம் ருத்ரையா இயக்கி, இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா, அதர்வா நடித்த பானா காத்தாடி மற்றும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் போன்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவர்கள் தற்போது 32 ஆண்டுகள் கழித்து அவள் அப்படித்தான் என்ற படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

மேலும் அவள் அப்படித்தான் திரைப்படத்தை இந்த காலத்திற்கு ஏற்றார் போல் கதை வண்ணம் கெடாமல் இயக்கப் போவதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனையும், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவர் கொண்டா, மற்றும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞனி இளையராஜா அவர்களை இசையமைக்க கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அனைத்தும் கைகூடி வந்தால் அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் கூறியுள்ளார்.