இயக்குனர் பா. ரஞ்சித்தின் மகனை மடியிலும், மகளை அரவணைத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் கமலஹாசன்.! வைரலாகும் புகைப்படம்..

பெரும்பாலும் இயக்குனர்களுக்கும் சமீப காலங்களாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக பா ரஞ்சித் இருந்து வருகிறார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் பா ரஞ்சித்.

மெட்ராஸ் திரைப்படத்தினை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கபாலி, காலா உள்ளிட்டு இரண்டு திரைப்படங்களையும் இயக்கி இருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் செய்தியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பிரச்சினை பெற்றது. இவ்வாறு திரைப்படங்களை மட்டுமல்லாமல் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய அதில் பல குறும்படங்களையும் இயக்கி வருகிறார்.

இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, டைட்டர் போன்ற திரைப்படங்களும் வெளியானது. அந்த வகையில் கடைசியாக சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது.

kamal hassan 1
kamal hassan 1

தற்பொழுது பா ரஞ்சித் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் ஆகியோர்களை வைத்து தாங்களான் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சென்னை எழும்பூர் மிடில் டன் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீலம் பண்பாடு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தின் சிறப்பு விழா நடைபெற்றது.

kamal hassan
kamal hassan

அந்தத் திறப்பு விழாவில் உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்ற நிலையில் புத்தக விற்பனை நிலையத்தை கமலஹாசன் அவர்கள் திறந்து சிறப்புரையாற்றினார். அந்த வகையில் பா. ரஞ்சை தன்னுடைய குடும்பத்தினர்களுடன் பங்கு பெற்ற நிலையில் அப்பொழுது கமலஹாசன் அவர்கள் பா.ரஞ்சித்தின் மகனை மடியில் வைத்துக்கொண்டும் அவருடைய மகளை தன்னுடைய கையால் அனைத்தும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

kamalhassan
kamalhassan

Leave a Comment