ஹாலிவுட் பட நடிகர் ரேஞ்சுக்கு மாறிய இயக்குனர் அட்லீ.! வித்தியாசமான கெட்டப்பில் செம்ம மாஸ் காட்டும் புகைப்படம்

திரை உலகில் இருக்கும் நடிகர்களையும் தாண்டி இயக்குனர்களும் ஆரம்பத்திலேயே தொடர் ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் வலம் வருகின்றனர்.

அந்த வகையில் வெற்றி கண்டுள்ள அவர்தான் இயக்குனர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்தாலும் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் முதல்படமே “ராஜா ராணி” அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இவர் விஜயுடன் 3 முறை தொடர் கூட்டணி அமைத்து மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தார்.

அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 200 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்தது இதைத்தொடர்ந்து தற்போது இந்தி பக்கம் சென்றுயுள்ள அட்லி முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தற்போது பணியாற்ற உள்ளார் மேலும் குறைந்தது இரண்டு வருடத்திற்கு இந்தி நடிகர்களை வைத்து இயக்குவார் என தெரிகிறது.

இந்த நேரத்தில் அட்லி தனது கெட்டப்பை முற்றிலும் மாற்றி வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார்.

அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இது நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version