பணக்கார இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த அட்லீ.. ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

atlee kumar
atlee kumar

Atlee Salary: இயக்குனர் அட்லீ ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

இதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் இந்த படத்தினை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். இவ்வாறு தொடர் வெற்றியின் காரணமாக குறுகிய காலத்திலேயே பிரபலமான அட்லீ தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் எனவே இதற்காக இவருடைய சம்பளமும் அதிகரித்துள்ளது.

பிகில் படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்கிய இவர் தற்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருவதால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் எனவே ஜவான் படத்தை இயக்குவதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி அட்லீக்கு ஜவான் படத்திற்காக ரூபாய் 32 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் ரூபாய் 42 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர்.

அட்லீ குமார் இயக்கத்தில் ஜவான் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் கண்டிப்பாக 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதனை அடுத்து ஜவான் படத்தினை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம். இந்த படத்திற்கு ரூபாய் 52 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அட்லீயும் ஒருவராக மாறிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.