இதுவரை மீடியா பக்கமே காட்டாமல் இருந்த அட்லீ மற்றும் பிரியா மகனின் அழகிய புகைப்படம்.!

Director Atlee Kumar: இயக்குனர் அட்லீ முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் குவித்து வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இவருடைய முதல் திரைப்படமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இவ்வாறு ராஜா ராணி படத்தின் வெற்றியினை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

இவ்வாறு தொடர் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தினை இயக்கியுள்ளார். சுமார் ரூபாய் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் கேமியோ ரோலில் சஞ்சய் தத் நடித்து மிரட்டி உள்ளார் இவருடைய என்ட்ரியில் ரசிகர்கள் திரையரங்கையே அதிர வைத்தனர். இவ்வாறு ஜவான் படம் 1000 கோடி வசூலை நெருங்குமா என்று எதிர்பார்ப்பு பெரிதளவிலும் இருந்து வருகிறது.

atlee kumar
atlee kumar

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லீ பிரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தான் சமீபத்தில் இந்த தம்பதியினர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்படி தற்பொழுது இயக்குனர் அட்லீ முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்