அட்லி ஷாருக்கான் இணையும் திரைப்படத்தின் ஹீரோயின் இவங்களா.!! என்ன டைட்டில் இது…

0

director atlee and sharukkhan bollywood movie heroine and title reveal: தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அட்லி இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து இவர் இயக்குனர் ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை பிடித்து போக அவரும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஹீரோயினாக பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திரைப்படத்திற்கு  சங்கி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியப்படுகிறது.

இந்தப் திரைப்படத்தின் டைட்டிலை கேட்டு இது என்ன டைட்டில் வித்தியாசமாக உள்ளது என அனைவரும் கேலி செய்து வருகின்றனர். மேலும் அதுமட்டுமில்லாமல் சிலர் அட்லி எப்படியோ ஷாருக்கானை படத்தில் நடிக்க வைத்து விட்டார் எனவும் கூறி வருகின்றனர்.

deepika shahruk
deepika shahruk