ஏஆர் முருகதாஸ் மகன் மற்றும் மகள் இவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டார்களா.? வைரலாகும் குடும்ப புகைப்படம்..

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள பல இயக்குனர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் ஏஆர் முருகதாஸ். இவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதில் இவருடைய மகன் மற்றும் மகள் இவ்வளவு பெரியதாக வளர்ந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ஏஆர் முருகதாஸ். முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு, விஜய் நடித்த துப்பாக்கி உள்ளிட்ட அடுத்த அடுத்த பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தினை ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்த நிலையில் இதனை அடுத்து இவர் அனிமேஷன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கடந்த 2005ஆம் ஆண்டு ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ar murugadhas
ar murugadhas

ரம்யா ஏஆர் முருகதாஸ் அவர்களின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்களுடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அடிக்கடி முருகதாஸ் தன்னுடைய குழந்தைகளை படப்பிடிப்பிற்கு அழைத்து செல்வாராம்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் குடும்ப புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவருடைய மகன் மற்றும் மகள் இருவரும் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் இதோ அவர்களுடைய குடும்ப புகைப்படம்.

Leave a Comment