சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் அட்லீ.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

தனது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி பல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நட்சத்திரம் என்று கூட கூறலாம் அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பைப் பார்த்து தான் பல நடிகர்களும் நடிப்பைக் கற்றுக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த.

இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து,மீனா,குஷ்பு,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலானது.மேலும் பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.

இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி அடைந்தது.அதுமட்டுமல்லாமல் இவர் விஜய்யை வைத்து படத்தை இயக்கினால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அந்த அளவிற்கு விஜய்திரைபடம் என்றால் மிகவும் ஆர்வமாக திரைப்படத்தை இயக்கி வருவார்.

மேலும் இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது பலருக்கும் தெரிந்தது தான் அந்த வகையில் பார்த்தால் இவர் ஷங்கரிடம் இருந்து பல வித்தைகளை கற்று வைத்திருக்கிறார் என்று கூட கூறலாம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எந்திரன்.

atlee
atlee

இந்த திரைப்படத்தில் கூட ஷங்கருக்கு உதவி இயக்குனராக அட்லீ பணியாற்றியுள்ளார் அட்லீ ரஜினியிடம் படப்பிடிப்பு தளத்தில் கதைகளைக் கூறும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப்பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment