பாடலாசிரியர் பா விஜய் இயக்கத்தில், அர்ஜூன் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகும் மேதாவி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

0

Medhavi movie first look poster released: பிரபல பாடலாசிரியர் பா விஜய் இயக்கும் திரைப்படம் மேதாவி. ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தினை மக்கள் அரசன் பிக்சர் சார்பாக சூ ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஜீவா முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ஹீரோயினாக ராசி கண்ணா நடிக்கின்றார்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, சிவ சாரா, ரோகிணி, தீனா, ரோபோ ஷங்கரின் மகள், ஒய் ஜி மகேந்திரன், அழகம்பெருமாள் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவு  முடிந்ததும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.