பாலா இயக்கிய அவன் – இவன் : படத்தில் நடித்த நடிகர் விஷாலுக்கு டப்பிங் கொடுத்தது.! பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் தானாம்.

0

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ஒருவர் பாலா. இவர் குறைந்த படங்களை இயக்கி இருந்தாலும் இவர் படம் தான் என்று தனியாகவே தெரியும் அந்த அளவுக்கு தனி திறமை வாய்ந்தவர் ஆவார். இவரது இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

அவர் இயக்கத்தில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் நான் கடவுள் திரைப்படத்திற்காக 2008 ஆம் ஆண்டு சிறந்த திரைப்பட இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றார். அவர் இயக்கிய படங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது கண்டிப்பாக அவன் இவன் திரைப்படம்.

இந்தப் படத்தில் விஷால், ஆர்யா இருவருமே ஒரு புதிய கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த படத்திற்காக விஷால் கண் கருவை மையத்தில் வைத்து நிறைய கஷ்டப்பட்டு நடித்திருப்பார். தற்போது இந்த படம் குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் அந்த படத்தில் விஷால் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார்.

அந்தப் பெண் வேடத்திற்கு டப்பிங் குரல் கொடுத்தது ஒரு சீரியல் நடிகை தானாம். அந்த பெண் யார் என்றால் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது பாரதிகண்ணம்மா தொடர்.

அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி கொண்டிருக்கும் கண்ணம்மாவுக்கு சித்தியாக நடித்துக்கொண்டிருக்கும் செந்தில்குமாரி தான் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு டப்பிங் பேசியுள்ளாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.