தளபதியுடன் இந்த திரைப்படம் கண்டிப்பாக இருக்கிறது.! பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.!

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார் பிகில் படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியுள்ளது, இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட இருக்கிறார்கள், இதனைத்தொடர்ந்து அடுத்து விஜய் லோகேஷ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதற்காக லோகேஷ் திரைக்கதை அமைப்பதில்  மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார், இந்த நிலையில் சுப்பிரமணியபுரம் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் விஜய்யிடம் ஒரு கதையை கூறியுள்ளார் அந்த கதை விஜய்க்கும் பிடித்து விட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை பற்றி சமீபத்தில் நடைபெற்ற கென்னடி கிளப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய்க்கு கதை கூறினீர்களே அந்த திரைப்படம் எப்பொழுது என கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த சசிகுமார். விஜய் என்னுடைய நண்பர் அவரிடம் ஒரு கதை கூறியுள்ளேன் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.

கண்டிப்பாக அந்த திரைப்படம் இருக்கிறது விஜய் ஓகே சொன்னால் பார்ப்போம் என கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டத்தை தந்துள்ளது.