பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தினேஷ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா.! அட இவர் சீரியல் நடிகையாச்சே

bigg boss dinesh : விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 சில நாட்களுக்கு முன்புதான் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில்  வைல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே வந்த தினேஷ் சிறந்த ஒரு போட்டியாளராக இருந்தார். இவர் வின்னராக வர வாய்ப்பு அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர் . அப்படி இல்லை என்றால் டாப் 3க்குள்ளாவது இருப்பார் என எதிர்பார்த்தனர்.

இவர் பிக் பாஸ்க்கு வருவதற்கு முன்பு விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருந்தார். சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகை ரக்ஷிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல சீரியல்களில் நடித்திருந்தனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருக்கும் இவரது மனைவி ரக்ஷிதாவிற்கும்  மனக்கசப்பு காரணமாக டைவர்ஸ் ஆக போவதாக செய்தி இணையதளத்தில் கசிந்தது. அது உண்மைதான் ஆனால் இவருக்கோ தனது மனைவியை பிரிவதில் விருப்பமில்லை.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது மனைவி ரக்ஷிதாவை ரொம்ப காதலிப்பதாகவும்  மீண்டும்  தனது மனைவியுடன் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் பிக் பாஸ் வீட்டிற்கு அவர் வந்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு நிறைய பேட்டிகள் அளித்து வந்தார். ஆனால் அவரது மனைவியோ நோ மீன்ஸ் நோ என கூறிவிட்டார் மீண்டும் சேர்வதில் விருப்பம் இல்லை என கூறிவிட்டார் . மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் B டிமான விஷ்ணு, மணி, ரவீனா, கூல் சுரேஷ், அர்ச்சனா போன்றவருடன் நட்பாக இருந்தார்.

அர்ச்சனா வெற்றி பெற்றவுடன் மேடையிலேயே அர்ச்சனாவை தூக்கி அனைவரும் கொண்டாடினர். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நிறைய நண்பர்களை  சந்தித்தார். அந்த வகையில் இவருடன் சீரியலில் நடித்த நடிகை பிரேமி வெங்கட்டை வெளியில் மீட் பண்ணி உள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சீரியல் நடிகை பிரேமி வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

dinesh
dinesh
dinesh
dinesh
dinesh
dinesh