ஐயா சாமி என்னை மன்னிச்சிடுங்க.! பிசிசிஐ-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்.!

0
dinesh karthik
dinesh karthik

தினேஷ் கார்த்திக் பிசிசிஐ விதியை மீறியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதனால் தினேஷ் கார்த்திக் திடீரென பிசிசிஐ இடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான டிரின்பகோ நைடர்ஸ் உரிமையாளர்களில் ஒருவர், இந்த அணியின் ஜெர்ஸி அறிமுக விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார், ஆனால் பிசிசிஐ விதிபடி பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் அவர்களின் அனுமதியின்றி வேறு ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது.

ஆனால் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டுள்ளார், இதனால் பிசிசிஐ விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதுமட்டுமில்லாமல் உங்க ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது, மேலும் அந்த நோட்டீசுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

அவர்கள் மூன்று வாரம் கால அவகாசம் கொடுத்தாலும் மூன்று நாளில் தலைதெறிக்க ஓடி வந்து மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக், டிரின்பகோ அணியில் நான் ஆடவும் இல்லை அந்த அணிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் பிசிசிஐ இடம் ஒப்புதல் கேட்காத தற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனது கார்த்திக் தெரிவித்துள்ளார்.