தன்னந்தனியாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி.! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

0

திருப்பூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ரயிலில் பயணம் செய்தார், அப்பொழுது இவருக்கும் ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, அதனால் தொலைபேசிகளில் நீண்ட நேரம் பேசிக் கொண்டுள்ளார்கள்.

இவர் அந்த இளைஞனுடன் செல்போனில் பேசும் விவகாரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அதனால் சிறுமியை கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்துள்ளார்கள், ஆனால் காதலை விட முடியாத அந்த சிறுமி அந்த இளைஞரை எப்படியோ தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அந்த இளைஞரோ சிறுமியை திண்டுக்கல்லுக்கு வர சொல்லி பேசிக்கொண்டிருந்த பிறகு பேருந்து நிலையத்தில் இருக்கச் சொல்லிவிட்டு தனது அப்பா அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார், ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் வரவில்லை சிறுமியோ தன்னந்தனியாக பேருந்து நிலையத்திலேயே நின்றுள்ளார்.

தன்னந்தனியாக நின்ற சிறுமியை சிலர் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார்கள் அதனால் அந்த இடத்திலேயே அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை போலீசாரிடம் ஒப்படைத்தார்கள், தற்பொழுது அந்த இளைஞரின் செல்போனை வைத்து அவரைப் பற்றிய தகவலை விசாரித்து வருகிறார்கள்.