“வாரிசு” பட வெற்றிக்காக லோகேஷிடம் இப்படி ஒரு காரியத்தை செய்ய சொல்லும் தில் ராஜூ.?

0
vijay-logesh-thil-raju
vijay-logesh-thil-raju

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் மற்றும் தில் ராஜு தயாரித்துள்ளார் வாரிசு படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால் படம் குறித்த அப்டேட்டுகள் உடனுக்குடன் வந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் டைலர் வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கை கோர்த்து அவரது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் இந்த படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை முடிந்த நிலையில் படபிடிப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.  லோகேஷ் எப்போதுமே படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ஒரு அறிமுக வீடியோவை வெளியிடுவார். அதுபோல் தற்போது தளபதி 67 படத்திற்கும் வீடியோ ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோவை இப்போது வெளியிட வேண்டாம் என லோகேஷ் இடம் தில் ராஜு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் வாரிசு படத்தின் பிசினஸ் குறைந்து விடுமோ என நினைத்து தில் ராஜு இப்படி கூறியுள்ளார். வேறு வழி இல்லாமல் வாரிசு படம் வெளிவந்த பிறகு தனது ப்ரோமோவை வெளியிடலாம் என லோகேஷ் முடிவு செய்துள்ளார்.