சந்தானத்தின் டிக்கிலோனா எப்படி இருக்கு இதோ விமர்சனம்.!

dikkiloona review : நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்து அசத்திய திரைப்படம்தான் டிக்கிலோனா இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை  முன்னிட்டு OTT இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் டிராவல் கதைகள் வருவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய இன்று நேற்று நாளை திரைப்படம் மெஹா  ஹிட்டடித்தது அதேபோல் தான் ஒரு காமெடி கலந்த திரைப்படமாக கொடுத்திருக்கிறது டிக்கிலோனா. அந்தவகையில் இதுவும் காமெடி கலந்த டைம் டிராவல் திரைப்படம் தான். சந்தானம் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையைக் குறைத்து ஒரு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் ஒரேடியாக உடல் எடையை குறைத்தால் அவரின் முகம் வாடி போனது போல் இருக்கிறது பழையபடி பல பலனு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி விடுவார் என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் மூன்று கெட்டப்களில் நடித்த சந்தானத்திற்கு விசில் போடலாம். படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயினை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ஏழு வருடங்களுக்கு பிறகு  உறவில் விரிசல் ஏற்படுகிறது.

அதனால் சந்தானம் ஒரு முடிவு எடுக்கிறார் தனது திருமணத்தை நடக்காமல் நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்து திருமணத்தை நிறுத்த பார்க்கிறார். அதனால் திருமணம் நடைபெற்ற காலத்திற்கு சென்று தனது வாழ்க்கையை மாற்ற நினைக்கிறார். இந்த நிலையில் சந்தானம் திருமணம் நடைபெறாமல் வேறொரு வாழ்க்கையை டைம் டிராவல் மூலம் தேர்வு செய்கிறார் ஆனால் அந்த வாழ்க்கையும் மிகவும் கடினமாக செல்கிறது அதனால் மீண்டும் டைம் ட்ராவல் ஏறி திருமணம் நடக்கும் நாளுக்கே வந்துவிடுகிறார்.

அதன் பிறகு மூவரும் இணைந்து எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. இந்த திரைப்படத்தை பார்த்தால் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற கதைதான் டிக்கிலோனா எந்தக வாழ்க்கையை தேர்வு செய்தாலும் அதில் இன்பம் துன்பம் வரத்தான் செய்யும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை காமெடியுடன் கலந்து வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்ஷன் அமைப்பில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

முதல்பாதியில் நிழல்கள் ரவியின் கதை 2 சந்தானம் அடித்துக் கொள்கிறார்கள் இரண்டாவது பாதி இரண்டாவது வாழ்க்கையிலும் பல கஷ்டங்கள் திருமண அரங்கில் ஆனந்தராஜ் முனிஸ்காந்த் காமெடி கொஞ்சம் சலிப்பை தருகிறது மொத்தத்தில் இந்த திரைப்படம் ஒரு ஜாலியான என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்பொழுது உள்ள  சூழ்நிலைக்கு மக்களை சிரிக்கும் விதமாக இந்த திரைப்படத்தை சந்தனம் கொடுத்துள்ளார்.

Leave a Comment