டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் மற்றும் சந்தானம் கதாபாத்திரம் இதுதானோ.! செம்ம மாஸ் கதாபாத்திரம் தான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு மன்மதன் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹீரோவாக நடித்த திரைப்படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் 3 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் பற்றி அடிப்படையாகக் கொண்டு உள்ளதாக புறப்படுகிறது. டகால்டி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சந்தானம் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இந்த படத்தில் ஹாக்கி வீரர்களாக நடித்து உள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தானம் அவர்கள் இந்த படத்தில் முதன் முதலாக 3 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதில் ஒன்று ஹாக்கி வீரர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.

Leave a Comment

Exit mobile version