பைத்தியக்காரன் ஜெயிலிலிருந்து தப்பிக்கும் சந்தானத்தின் டிக்கிலோனா டெலிட்டட் காமெடி வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் காமெடியனாக அறிமுகமானவர் சந்தானம் அதன்பிறகு படிப்படியாக வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். தனது காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்தார். அதேபோல் சந்தானத்தின் காமெடி மற்றவர்களை  கிண்டல் செய்வதும் பட்டப் பெயரை வைத்து கூப்பிடுவது இது போல் அமைந்திருக்கும்.

இந்த நிலையில் சந்தானம் ஒரு காலகட்டத்தில் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என உறுதிமொழி எடுத்து ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்தார். காமெடியனாக நடிக்கும் பொழுது நகைச்சுவை பேச்சுக்கும் டைமிங் பஞ்சுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்தது ஆனால் தற்பொழுது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம்தான் பாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா இந்த திரைப்படம் டைம் மெஷினை வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் சந்தானம் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

dikkilona
dikkilona

மேலும் சிறப்பு விருந்தினராக ஹர்பஜன்சிங் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து யோகிபாபு ஆனந்தராஜ் நிழல்கள் ரவி மொட்டை ராஜேந்திரன் முனிஸ்காந்த் என பலரும் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

டிக்கிலோனா திரைப்படத்தில் எத்தனை காமெடி நடிகர்கள் இருந்தாலும் பைத்தியக்கார மருத்துவமனை ஜெயிலில் அடைபட்டு இருக்கும் மாறனின் காமெடிதான் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த நிலையில் மாறன் சந்தானம் இருவரும் பைத்தியக்கார ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த காட்சி படத்தில் கிடையாது டெலிட் செய்யப்பட்ட காட்சியாகும். இதோ அந்த வீடியோ. மாறனின் காட்சி படத்தில் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்த காட்சியை படத்திலிருந்து ஏன் நீக்கினார்கள் என படக்குழுவை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

https://youtu.be/r8lY1XZNC_Y

Leave a Comment