ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா பகிர்ந்த பதிவை பார்த்தீங்களா.!

நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் அவருக்கு நிறைய திரைப்படங்கள் கைகொடுத்து இருந்தாலும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகவும் நல்ல திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் கைகோர்த்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இணைந்து நடித்தது மக்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை பேராதரவை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக ஆர்யாவின் கதாபாத்திரம் மக்களை கவர்ந்து விட்டது.

கரடுமுரடான உடம்பை வைத்து இவர் பாக்ஸிங் செய்யும் முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தை பார்த்த பல இளைஞர்களும் ஆர்யாவின் நடிப்பு வேற லெவல் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆர்யாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு ஆர்யாவை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகர் சூர்யாவும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி ட்விட் செய்துள்ளார் ஆம் நடிகர் சூர்யா சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துகிறது வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும் நடிகர்களும் ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.

வாழ்த்துக்கள் என படக்குழுவை மிகவும் பாராட்டி சூர்யா டுவிட் செய்துள்ளார்.இவர் பகிர்ந்த இந்த பதிவானது தற்போது ஆர்யாவின் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சூர்யாவிற்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version