விஜய் படம் என்றால் வாயை பிளந்துகிட்டு வருவென்னு நினைத்தீர்களா.! அதற்கு வாய்ப்பே இல்லை என அடம் பிடித்த பிரபல இளம் நடிகை…

vijay
vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்போது தங்களுடைய படங்களில் தீவிரமாக நடித்து வரும் நிலையில் பிரபல இளம் நடிகை ஒருவர் விஜய், அஜித் கூட நடிக்க முடியாது என்று வந்த வாய்ப்பை தட்டி விட்டார்.

அதாவது தளபதி விஜய் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தற்போது உள்ள முன்னணி நடிகைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் விஜய் படத்தில் நடித்தால் போதும் என்று வெகு நாட்களாக காத்திருந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு வாரிசு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவருக்கு முன்பே ஒரு இளம் நடிகைக்கு விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை சாய் பல்லவி தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகை சாய் பல்லவி அவர்கள் நடிப்பு, நடனம் என அனைத்திலும் பட்டைய கிளப்ப கூடிய ஒருவர்.

இவர் ஒரு காலகட்டத்தில் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்று தீவிர ஆசைப்பட்டவர் தான் ஆனால் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம் என்று தற்போது மறுத்திருக்கிறார் அதாவது நான் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புகிறேன் ஆனால் விஜய், அஜித் உடன் நடித்தால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.

எனக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜயை தொடர்ந்து அஜித்துடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்தப் படத்திலும் நடிகை சாய் பல்லவி நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதைப் பார்த்த ரசிகர்கள் வாய்ப்பில்லை என்றாலும் வாய் கொழுப்பு அதிகமாகவே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியை இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.