நடிகர் சூப்பர் ஸ்டார் அவர்கள் தன்னுடைய மடியில் தூக்கி வைத்திருக்கும் குழந்தை புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக அந்த குழந்தை யார் என ரசிகர்கள் தேடி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி காந்த் 80 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரையிலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவருடன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்ற திரைப்படம் தான் அண்ணாத்த. ஆனால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது இந்நிலையில் தற்பொழுது நடிகர ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து இருக்கிறார் மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடைய பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த குழந்தை வேறு யாருமில்லை இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் மகள் தான் அவரை தான் ரஜினிகாந்த அவர்கள் தூக்கி வைத்திருக்கிறார்.

இந்தியாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவர் முதலில் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் இசை பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பல பாடலுக்கு இசையமைத்துள்ளார்.