குக் வித் கோமாளி செட்டில் யார் யார் வந்து இருக்கிறார்கள் பார்த்தீர்களா.! இதோ மாஸ் தகவல்

தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்துகொண்டிருப்பது விஜய் டிவி.  விஜய் டிவியில் தான் வித்தியாசமான பல ரியாலிட்டி ஷோக்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் அருமையாக காமெடியை மையமாக வைத்து இயக்குவதால் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பேராதரவை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர் பட்டாளம் அமைந்துள்ளது.

அந்த வகையில் கமலஹாசன் நிகழ்ச்சியான பிக்பாஸ்,  பிரியங்கா ஸ்டார் மியூசிக், ரக்சன் குக் வித் கோமாளி,  மாகாபா சூப்பர் சிங்கர் உள்ளிட்ட இன்னும் பல நிகழ்ச்சிகள் டிஆர்பி அடித்து நொறுக்கி உள்ளது.  அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலம் அடைந்ததோ அதே அளவிற்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் பிரபலமடைந்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் தற்பொழுது தான் இரண்டாவது சீசன் முடிந்தது.  மூன்றாவது சீசன் ஆரம்பிப்பதற்காக முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் குக் வித் கோமாளி செட் திறக்கப்பட்டுள்ளது. அதாவது சென்ற வாரம் அறிமுகமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சமையல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.  எனவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போட்டியாளர்கள் அனைவரும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்துள்ளார்கள்.

Leave a Comment