காமெடி நடிகர் பவுன்ராஜ் பற்றி உருக்கமான பதிவை பகிர்ந்த சூரி என்ன பகிர்ந்துள்ளார் பார்த்தீர்களா.!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த பல நடிகர்கள் ரசிகர்களை விட்டு மறைந்து விடுகிறார்கள் என்ன காரணம் என்று தெரியாமலேயே பலரும் மறைந்து விட்டார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவுலகில் நடித்து வந்த பல நடிகர்களை நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் பவுன்ராஜ் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் மிகவும் அசத்தலாக தனது காமெடி திறமையை காட்டி இருப்பார் அதேபோல ரஜினி முருகன் திரைப்படத்திலும் நன்றாக நடித்திருப்பார் இவ்வாறு நடித்து வந்த நடிகரும் உதவி இயக்குனருமான இவர் மாரடைப்பால் ரசிகர்களை விட்டு பிரிந்துவிட்டார்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக இருந்து திரைப்படங்களை இயக்கி இருக்கார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் திடீரென்று மாரடைப்பு காரணமாக இவர் மறைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவலாக மாறிவிட்டது.

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது கனவாகவே போய் விட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் இவரது இழப்பை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல் இவருடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் சூரியும் தனது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அண்ணன் பவுன் ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளாக இருக்கு.

அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.அதேபோல் இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் இவரது இழப்பை தாங்க முடியாமல் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்-.

Leave a Comment