தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷெரின் என்ன பகிர்ந்துள்ளார் பார்த்தீர்களா.!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்குபெற்ற பல நடிகைகள் தற்போது சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷெரின்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றார் ஆனால் இவரைப் பார்த்து ரசிகர்கள் பலரும் 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த ஷெரினா இது என பலரும் ஆச்சரியப்பட்டு பார்த்தார்கள்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பொழுது ஷெரின் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக மாறிவிட்டார் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தார்.மேலும் பிக்பாஸ் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாராம்.

இந்த தடுப்பூசியை போட்ட பின்பு அவருக்கு சரியான ஜுரம்,தலைவலி, உடம்பு வலி போன்ற மிகவும் சோர்வாக இருந்தாராம் இதனை வைத்து பார்த்த ஷெரின் தடுப்பூசி எனக்கு வேலை செய்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் மேலும் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்களும் தடுப்பூசி போடப் போகிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sherin2
sherin2

ஆனால் ஒரு சில ரசிகர்கள் பலரும் பலவிதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள் ஆனால் நீங்கள் மட்டும் தான் இப்படி வித்தியாசமாக எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் என கூறிவருகிறார்கள்.

Leave a Comment