கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களை விட்டு பிரிந்து விடுகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் தமிழ் திரைஉலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகராக வலம் வந்தவர் நிதிஷ் வீரா.
இவர் தமிழ் திரை உலகில் புதுப்பேட்டை,வெண்ணிலா கபடிகுழு,அசுரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது திறமையை முழுமையாக மக்களுக்கு வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமடைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அதிலும் குறிப்பாக இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இவர் முதல் திரைப்படத்திலும் பிரபல நடிகருடன் இணைந்து நடித்திருக்கிறார் அதேபோல் கடைசி திரைப்படத்திலும் இந்த நடிகருடன் தான் இணைந்து நடித்திருக்கிறார் யார் அந்த பிரபல நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை புதுப்பேட்டை திரைப்படத்தில் இவர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதேபோல் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படத்திலும் அவருடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒரு நடிகருடன் ஆரம்பித்து அந்த நடிகர் உடனே தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு விட்டார் என கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் அதிலும் குறிப்பாக அசுரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது இதை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இன்னும் எத்தனை பேர் இந்த கொரோனா தொற்றால் மறைய போகிறார்களோ என்பதுதான் தெரியவில்லை என்று கூறி வருகிறார்கள்.

