விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இரவு நேரத்தில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

nayanthara
nayanthara

தமிழ் திரை உலகில் பல நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது தங்களது இல்ல வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். அதுபோலத்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்பொழுது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மையில் கூட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கும்பகோணத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பார்த்திருக்கலாம் இதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பிலும் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் நயன்தாரா நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால் தொடர்ச்சியாக அவர் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுபோல விக்னேஷ் சிவனும் சமீபத்தில் அஜித் படத்தை இயக்க இருந்தார் ஆனால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை பின்பு அஜித் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவி செய்த வீடியோக்களை நாம் பார்த்திருக்கலாம்.

அதேபோல் தற்பொழுதும் இவர்களது வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது ஆம் நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் இருந்தவர்களுக்கு உதவி செய்த பொழுது எடுத்த வீடியோ காணொளி ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் இது போன்ற நல்ல செயல்களை நீங்கள் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.