நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. ஹிந்தியில் இன்னும் பல திரைப்படங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அமிதாப்பச்சன் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அமிதாப்பச்சன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர் தயாரிப்பாளர் என சினிமா துறையில் பணியாற்றியுள்ளார். அதேபோல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அப்படி இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி டான் கவுன் பனேகா குரோர்பதி என்னும் கோடீஸ்வர நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒரு காலகட்டத்தில் மக்கள் விரும்பி பார்த்தார்கள்.
பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் அமிதாப்பச்சன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மாணவன் தான் தற்பொழுது காவல் அதிகாரியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவன் போர்பந்தரில் காவல் அதிகாரியாக இருக்கிறார்.
குரோர் பதி நிகழ்ச்சியில் 2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் கலந்து கொண்டார் அப்பொழுது பல கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது அவர் பதிலளித்து கொண்டுவந்தார் கடைசியாகக் கேட்ட 15-வது கேள்விக்கும் அந்த சிறுவன் பதிலளித்தார் அதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றார்.

ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பணத்தை வாங்கும் வயது வரம்பு 18 ஆனால் மட்டுமே பணத்தை தருவார்கள் ஆனால் அந்த சிறுவனுக்கு 14 வயது தான் அதனால் 4 வருடம் கழித்துதான் வரி விலக்கு போக அறுபத்தி ஒன்பது லட்ச ரூபாயை கொடுத்தார்கள் அந்த சிறுவனின் பெயர் ரவி மோகன் இவர் தற்பொழுது போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவரின் தந்தை கடற்படை அதிகாரியாக இருந்தார்.
இவரின் தந்தை பெயர் சைனி, மோகன் தனது படிப்பை ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள நாவல் பப்ளிக் பள்ளியில்தான் படித்தார் அதன்பிறகு ஜெய்ப்பூரில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி எம்பிபிஎஸ் படித்தார் அதன் பிறகு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு தயாரானார்.