விஜய்க்கு நண்பனாக ஷாஜகான் திரைப்படத்தில் நடித்த திவாகரன் கிருஷ்ணா தற்பொழுது எப்படி உள்ளார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் எனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் சொல்லவே வேண்டாம் பல கோடி வசூல் செய்து மிரட்டி விட்டது.

இதனை அடுத்து விஜய் தனது ஆரம்பகால கட்டத்தில் தனது அப்பா இயக்கத்தில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினாலும் பல இயக்குனர்களுடன் இவர் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படி விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்தான் ஷாஜகான் இந்த திரைப்படம் காதலர்களுக்காக எடுத்த திரைப்படம் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இதில் விஜய் தனது முழுமையான நடிப்பை காட்டி இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் தான் விரும்பும் காதலியை தனது நண்பனுக்காக விட்டுக்கொடுத்து விஜய் சேர்த்து வைப்பதுதான் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சியாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது விஜய்யின் நண்பராக நடித்த திவாகரன் கிருஷ்ணா இந்த திரைப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் திவாகரன் கிருஷ்ணா இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் அதிலும் குறிப்பாக இவர் நடித்த பிரியா வரம் வேண்டும்,சென்னையில் ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது.

divakaran krishna
divakaran krishna

இதனைத்தொடர்ந்து இவரை சினிமா பக்கம் பார்க்க முடியாமல் பல ரசிகர்களும் என்ன செய்து வருகிறார் என சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வந்தநிலையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு இவர் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment