புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் கெட்டப்பை பார்த்தீர்களா.? இணையத்தில் வைரலாகும் வேற லெவல் போஸ்டர்.!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் புஷ்பா இந்தத் திரைப்படம் தமிழில் வெளியாகிய பொழுது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு நல்ல ஆதரவு தந்தார்கள் என்றும் கூறலாம் மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததால் பல சினிமா பிரபலங்களும் இவரை பாராட்டி வந்தனர்.

இதைத்தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவராதா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு புஷ்பா2 திரைப்படமும் தற்பொழுது வெளியாக காத்திருக்கிறது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் இன்னும் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது ஆம் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இது பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டரை பார்க்கும் பொழுது அல்லு அர்ஜுன் இந்த இரண்டாம் பாகத்தில் மிகவும் பயங்கரமாக நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இந்த புகைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு சாமி வேடத்தில் இருக்கிறார் அதனால் படத்தின் சுவாரசியம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிகிறது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  புஷ்பா 2 திரைப்படம் விரைவில் வெளிவந்துவிட்டால் இந்த இரண்டாம் பாகத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைப்பது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment