தனுஷின் கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் 14 வருடத்திற்கு முன்பு ஜீவா படத்தில் நடித்துள்ளார் தெரியுமா. வைரலாகும் புகைப்படம்.

mari selvaraj
mari selvaraj

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி நடைபெற்று வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு  தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு முன்பு தனுஷ் மற்றும் தாணு கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.  இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தனது இரண்டாவது படத்திலும் தனுஷை வைத்து தயாரிக்க முடிவு செய்தார்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் நடித்திருந்த திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்திற்கு பிறகு மாரிசெல்வராஜ் பற்றி தான் அனைவரும் பேசி வருகிறார்கள். அதோடு ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை மாரிசெல்வராஜ் கூறிவருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரம் கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் அருமையாக இருந்ததால் மாரி செல்வராஜின் வீட்டிற்கே நேரடியாக சென்று வாழ்த்துக்களை கூறியிருந்தார் அந்த புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது மாரிசெல்வராஜ் விக்ரம் மகன் துரு விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளார். இந்தப் படம் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் சில வருடங்களுக்கு முன்பு  ஒரு திரைப் படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில் ஜீவா நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் திரைப் படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் நடித்திருந்த மாரி செல்வராஜின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவ்வாறு சின்ன ரோலில் நடித்து இருந்த மாரி செல்வராஜ் தற்பொழுது தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

mari-selvaraj-in-kattrathu-tamil-movie
mari-selvaraj-in-kattrathu-tamil-movie