போலீசில் மாட்டிக்கிட்டீங்களா Rc புக் லைசன்ஸ் கையில் இல்லையா.! இனி கவலையே வேண்டாம்…

பொதுவாக நாம் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது போக்குவரத்து காவலரிடம் சிக்கிக்கொண்டால் நம்மிடம் முதலில் அவர்கள் கேட்பது ஆவணங்கள் தான் அதாவது லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் தான். இது இரண்டும் இருந்தால் தான் அவர்கள்  எதுவும் கேட்க மாட்டார்கள். ஆர்சி புக் மற்றும் லைசன்ஸ் நம்மிடம் இல்லை என்றால் அவர்களிடம் பைன் கட்ட நேரிடும்.

இந்த நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி ஓட்டுநர்களிடம் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு சான்று இன்சூரன்ஸ் சான்றுகளை காட்டும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் போக்குவரத்து போலீசாரையும் மாநில போக்குவரத்து துறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளது.

ஒரிஜினல் சான்றிதழ்களுக்கு பதிலாக எலக்ட்ரானிக் வடிவிலோ அல்லது எம்பரிவாகன் ஆப் மூலமாகவோ காட்டப்படும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அசல் உரிமங்களை எப்பொழுதும் உடன் வைத்திருக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நம்மலில் பல பேர் இந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது என்பது இயலாத காரியம் அதனால் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் டவுன்லோட் செய்து இதை பயன்படுத்தலாம்.

அதை எவ்வாறு டவுன்லோட் செய்வது எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை இங்கே காணலாம். எம்பரிவாகன்  செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் பிறகு அதில் உங்களின் பெயர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் மாநிலம் என அனைத்தும் கேட்கப்படும் நீங்கள் இதனை கரெக்டாக நிரப்ப வேண்டும்.

பிறகு இந்த செயலியை சைன் இன் செய்து அதன் பிறகு உங்கள் மொபைல் போனிலிருந்து OTP ஒன்று வரும் அதனை பயன்படுத்தி அந்த செயலி மூலம் உள்ளே நுழையலாம். அதன் பிறகு ஆர்.சி புக் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் என இரண்டு  ஆப்ஷன் வரும் அதன் மூலம் ஆப்ஷனையும் தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் டவுன்லோட் செய்து கொள்ள விரும்பினால் அந்த நம்பரை நீங்கள் அங்கு டைப் செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்கள் டிரைவிங் லைசென்ஸ் முழு தகவலையும் அங்கு நீங்கள் பெறலாம் அதுமட்டுமில்லாமல் கீழே add 2 டேஷ்போர்டு என்ற ஆப்ஷன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்யலாம் அதற்காக நீங்கள் பிறந்த தேதி உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்களுடைய ஆவணம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த தகவலை எப்பொழுது வேண்டுமென்றாலும் ஹோம் பட்டனை அழுத்தி நாம் பார்த்துக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் இணையதளம் இல்லை என்றாலும் இணையதள வசதி இல்லை என்றாலும் நீங்கள் உங்களுடைய ஆசி புக் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை  போக்குவரத்து காவல் அதிகாரியிடம் காமிக்க முடியும்.

அதேபோல் ஆர்சி புக் டவுன்லோட் செய்வதற்கு ஆர்சி புக் நம்பரை பதிவிட்டு டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோட் செய்தது போல் ஆர்சி புக்கையும்  டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் இந்த செயலி மூலம் எங்கு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் டிஜி லாக்கர் ஆப் வசதி தற்பொழுது எல்லா மொபைலுக்கும் வழங்கப்படவில்லை எனவும் எம்பரிவாகன் தற்பொழுது ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும்  சில நாட்களில் ஆப்பிள் போன்களுக்கு வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment