காசுக்காக இப்படி ஒரு செயலை செஞ்சிட்டீங்களே.? பொன்னியின் செல்வன் படத்த இலக்கிய மணிரத்னம் மீது வழக்கு தொடர்ந்த பிரபலம்…

0
maniratnam
maniratnam

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது வந்தது. இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மட்டும் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற 22ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் மணிரத்தினம் மீது பிரபலம் ஒருவர் வழக்கு பதிவு தொடர்ந்து உள்ளார். அதாவது வழக்கறிஞர் சார்லெக்ஸ் அலெக்சாண்டர் என்பவர் பொன்னியின் செல்வன் திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் மீது வழக்கு பதிவு தொடர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் சுயலாபத்திற்காக வரலாற்று கதை தவறாக பயன்படுத்தியுள்ளார் மணிரத்தினம் என்றும், வரலாற்று படத்தை எடுக்கும்போது கண்டிப்பாக அதைப் பற்றி அலசி ஆராய்ந்து இருக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் போர் தந்திரங்கள் மற்றும் போர்களில் கையாளும் விதிமுறைகள் அனைத்தையும் சோழர்கள் நேர்த்தியான முறையில் பயன்படுத்தியிருப்பார்கள் ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர்களை அவமதிப்பது போன்று காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக  மணிரத்தினம் மீது குற்ற சாட்டை முன் வைத்துள்ளார்.