சினிமா உலகில் என்ட்ரி ஆவதற்கு முன்பாக விஜய் சேதுபதி பாஸ்ட் புட் வேலை செய்தாராம்.? அப்போ அவருடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

0

தென்னிந்திய திரை உலகில் மிகப் பெரிய ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு அந்த திரைப்படங்களில் இவரது நடிப்பு மிரட்டும் அளவில் இருந்து வந்துள்ளன.

இதனால் ரசிகர்கள் இவரை செல்லமாக மக்கள் செல்வன் என்று அழகாக கூப்பிட்டு வருகின்றனர். சினிமா உலகில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மேலும் தமிழில் தற்போது  துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் தற்போது வெளியாக உள்ளது இதை தொடர்ந்து அவரது நடிப்பில் வரிசை கட்டி பல படங்கள் நிற்கின்றன.

அந்த வகையில் யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி போன்ற பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சினிமா உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாஸ்ட்புட் கடை ஒன்றில் வேலை செய்தார் விஜய் சேதுபதி மாத சம்பளமாக 750 ரூபாயைப் பெற்று உள்ளார் என செய்தி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருந்தவர் தற்போது தென்னிந்திய சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அந்த அளவிற்கு தனது திறமை மீது நம்பிக்கை வைத்து இருந்த காரணத்தினால்தான் தற்போது சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.