விஜய்க்கு முன்பாகவே தனுஷுடன் சேர்ந்து நடிக்க இருந்த விஜய் சேதுபதி ஆனா மிஸ் பண்ணிவிட்டாரே.. எந்த படத்தில் தெரியுமா.?

சமீபகாலமாக நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெறுகின்ற காரணத்தினால் தான் அடுத்தடுத்து குறை இருக்கும் தனுஷின் படங்களை பார்க்கவும் மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் முதலாவதாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வருகிற மார்ச் 11-ஆம் தேதி OTT தளத்தில் மாறன் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் டைலர் கூட நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் என்பவர் எடுத்துள்ளார் இந்தப் படத்தில் தனுசுடன் இணைந்து மாளவிகா மற்றும் பல நடிகைகள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் நடித்த வடசென்னை மக்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட் அடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த படத்தை வெற்றிமாறன் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார் இந்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா  மற்றும் பல நடிகர்கள்,  நடிகைகள் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த படத்தில் தனுஷ் ஆண்ட்ரியாவுக்கு பிறகு அமீரின் கதாபாத்திரம் வியக்க வைக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் உண்மையில் அமீர் கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் நடிக்க இருந்தது  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானாம் ஆனால் சில காரணங்களால் தனுசுடன் இணைந்து விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனதற்கு பிறகு அந்த கதாபாத்திரம் அமீருக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Comment