மாஸ்டர் திரைப் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளாரா.? ரிலீஸ் எப்போழுது இதோ இயக்குனரே அறிவித்துவிட்டாரே.

Did Vijay play a double role in the Master Screenplay : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வர ரெடியாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் vj ரம்யா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது, அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது, இல்லையென்றால் மாஸ்டர் இன்று ஹவுஸ்ஃபுல்ளாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும். ஏனென்றால் அந்த அளவு ரசிகர்களுக்கு இயக்குனர் மற்றும் விஜய் மீது அதிக நம்பிக்கை, மேலும் இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளது என்பது கட்டுக்கதை என கூறுகிறார்கள்.

இப்படியிருக்க படத்தின் ரிலீஸ் தான் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது அட்லீஸ்ட் விஜய்யின் பிறந்த நாளன்று படம் வெளியாகும் என நம்பிக்கையாக எதிர்பார்க்கப்பட்டது, இந்த நிலையில் டீஸார் அல்லது ட்ரைலர் ஆவது விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடுங்கள் என படக்குழுவிடம் விஜய் ரசிகர்கள் சண்டை போடாத குறையாக கேட்டு வருகிறார்கள்.

ஆனால் நாட்டில் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் படம் ரிலீஸ் என்பது மிகவும் கஷ்டம் தான், இந்த நிலையில் எத்தனை நாட்கள் ஆனாலும் OTT இணைய தளத்தில் மட்டும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தளபதி விஜய் அதிரடியாக கூறியுள்ளார் நான் நடிப்பது ரசிகர்களுக்காக மட்டும்தான் அதனால் திரையரங்கில் படத்தை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்க சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்தார் அப்பொழுது அவர் கூறியதாவது இன்னும் 20 முதல் 30 நாட்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார் அதுமட்டுமில்லாமல் அதற்குள் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக விஜய்யின் பிறந்த நாளன்று ஜூன் 22ஆம் தேதி ட்ரெய்லரில் செய்துவிடுவோம் என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

Leave a Comment